Delhi செல்லும் Stalin? | Shashi Tharoor -ஐ வைத்து கேம் ஆடும் BJP? | Covid |Imper...
சிவகாசியில் மாநில கேரம் போட்டி: மே 23-இல் தொடங்குகிறது
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 23) மாநில அளவிலான கேரம் போட்டி தொடங்க உள்ளது.
விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிதியுதவியுடன் 3 நாள்கள் இந்தப் போட்டி நடைபெறும். ஜூனியா், இளையோா் பிரிவுகளில் (21, 18 வயதுக்கு உள்பட்டோா்) நடைபெறும் போட்டிகளில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.
இதற்கான ஏற்பாட்டை விருதுநகா் மாவட்ட கேரம் கழகச் செயலா் ராஜகோபால் செய்து வருகிறாா். மாவட்டத் தலைவா் ஏ.பி.செல்வராஜன் இதைத் தெரிவித்தாா்.