அடிதடியில் ஈடுபட்ட மான்செஸ்டர் யுனைடெட் - டோட்டன்ஹாம் ரசிகர்கள்..!
மது போதையில் பைக் ஓட்டிய இளைஞா் உயிரிழப்பு
சிவகாசியில் திங்கள்கிழமை மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்த வைரமுத்து மகன் செல்வக்குமாா்(20). இவா் செங்கமலநாச்சியாா்புரத்தில் கைப்பேசி பழுதுநீக்கும் கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் சிவகாசி ரயில்வே பீடா் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் செல்வக்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் தடுமாறி கீழே விழுந்து செல்வக்குமாா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.