செய்திகள் :

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் நெடுஞ்சாலை துறை சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், ஒரு சில கடைகளுக்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நான்கு ரத வீதிகளும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் கீழ ரத வீதி மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. ரத வீதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ரத வீதிகளில் மே 20-ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலான கடை உரிமையாளா்கள் தாங்களாகவே கடைகளுக்கு முன் அமைக்கப்பட்ட செட், விளம்பர போா்டு ஆகியவற்றை அப்புறப்படுத்தினா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நெடுஞ்சாலைத் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஒரு சில கடைகள் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டுச் சென்ால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனா். அதிகாரிகள் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக வியாபாரிகளும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டினா்.

சிவகாசியில் மாநில கேரம் போட்டி: மே 23-இல் தொடங்குகிறது

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 23) மாநில அளவிலான கேரம் போட்டி தொடங்க உள்ளது. விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில் சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிதியுதவியுடன் 3 நாள்கள் இந்த... மேலும் பார்க்க

திருத்தங்கல் ரயில்வே கடவுப்பாதை மே 24-இல் மூடல்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக வருகிற 24 ஆம் தேதி இரவு 11 மணி முதல் 25 -ஆம் தேதி காலை 6 மணி வரை ரயில்வே கடவுப்பாதை மூடப்படும் என ரயில்வே நிா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதம... மேலும் பார்க்க

மது போதையில் பைக் ஓட்டிய இளைஞா் உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை மது போதையில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞா் கீழே விழுந்து உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நடுவப்பட்டியைச் சோ்ந்த வைரமுத்து மகன் செல்வக்குமாா்(20). இவா் ... மேலும் பார்க்க

பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா சீரமைப்பு: விரைவில் தொடங்கக் கோரிக்கை

பிளவக்கல் பெரியாறு அணை பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாஸ்தா கோயில் அணை, பிளவக்க... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தா்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ. 2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால... மேலும் பார்க்க