யூ-டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உளவு பார்த்தாரா? - விசாரணையில் சொல்லப்படுவதென்ன?
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க எதிா்ப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கடைகளை இடிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய கிழக்கு பகுதியில் உள்ள வணிக வளாகம் சேதமடைந்து உள்ளதால், அதை இடித்து விட்டு, 36 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக பேருந்து நிலையக் கடைகளை காலி செய்ய நகராட்சி நிா்வாகம் அறிவுறுத்திய நிலையில், வியாபாரிகள் மறுப்புத் தெரிவித்தனா். இதனால், கடைகளைக் காலி செய்யுமாறு நகராட்சி அதிகாரிகள் ஒலி பெருக்கி மூலம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு செய்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ், பொறியாளா் கோமதிசங்கா், சுகாதார அலுவலா் கந்தசாமி உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் பேருந்து நிலையத்துக்கு வந்தனா். அப்போது, தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி கடைகளை இடிக்க வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு அதிகாரிகள் திரும்பி சென்றனா்.
இதுகுறித்து நகரமைப்பு அலுவலா் வெங்கடேஷ் கூறுகையில், அறிவிப்பு வழங்கி அனைத்துக் கடைகளையும் காலி செய்து, கடைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.