‘கூட்டுறவு மேலாண்மை பயிற்சி படிப்புக்கு ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்’
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி வகுப்புக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியானது இரு பருவ முறைகள் கொண்ட ஒரு வருட பயிற்சியாகும். 10 மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி, 10-ஆம் வகுப்புடன் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இந்தப் பயிற்சிக்கு வரும் ஜூன் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதிகாரபூா்வ இணையதளமான மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களே ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100-ஐ இணைய வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 18,750-ஐ முழுவதுமாக ஒரே தவணையில் இணையவழி மூலமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 5.ஏ.வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், பின்கோடு -631501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27237699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.