செய்திகள் :

காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

post image

நவராத்திரி விழாவையொட்டி காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சி 48 வது வார்டு பகுதி கணேஷ் நகரில் அமைந்துள்ளது தும்பவனம் மாரியம்மன் கோயில். நவராத்திரி விழாவையொட்டி இக்கோயிலில் தினசரி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!

நவராத்திரி விழாவினையொட்டி சனிக்கிழமை காலையில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

மாலையில் மாரியம்மன் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 புதிய ரூபாய் நோட்டுக்களால் மகாலட்சுமியாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இரவு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் மாரியம்மனை தரிசித்தனர்.

Mariamman temple was decorated with new rupee notes.

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன: முதல்வர் ஸ்டாலின்

கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தில் உயிரிழப்பு 12-ஆக உயர்வு? குழந்தைகள், பெண்கள் பலி?

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே... மேலும் பார்க்க

கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் பலி? மேலும் பலர் இறந்திருக்கலாம் என அச்சம்

கரூர் விஜய் கூட்டத்தில் பங்கேற்ற 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் மயக்கமடைந்த 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அரசு ம... மேலும் பார்க்க

கரூரில் விஜய்யே எதிர்பார்க்காத ‘திக்.. திக்... நிமிடங்கள்’ -பிரசாரத்தில் பெருந்துயரம்!

கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 4 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்ற... மேலும் பார்க்க

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி: தவெக தலைவர் விஜய்

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி என்று தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.கரூரில் இன்று அவர் பேசுகையில், காவல் துறை இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது. எனவே, அவர்களுக்கு என் மனமார்ந... மேலும் பார்க்க

அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு எந்த உரிமையும் இல்லை. அவர் அரசியலுக்கு ... மேலும் பார்க்க