அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!
காதலியை கரம் பிடிக்கும் `சுந்தரி' தொடர் நடிகர்; குவியும் வாழ்த்துகள்!
சின்னத்திரை நடிகராக பரிச்சயமானவர் ஜிஷ்ணு மேனன். சமீபத்தில் `சுந்தரி' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். ஜிஷ்ணு கேரளாவைச் சேர்ந்தவர். அவருக்கும் செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதிராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

பல சின்னத்திரை செலிபரிட்டிகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணிபுரிந்தவர் அபியாதிரா. மேக்கப் தொடர்பான வகுப்புகளையும் இவர் எடுத்து வருகிறார். சுந்தரி தொடரில் ஜிஷ்ணுவிற்கும் இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்திருக்கிறார். ஜிஷ்ணு - அபியாதிரா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் வீட்டில் எளிமையான முறையில் நடந்திருக்கிறது. பலரும் இவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். ஜிஷ்ணுவும், அபியும் ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். இருவரும் ஒர்க் அவுட் வீடியோக்களை தொடர்ந்து அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஜிஷ்ணு தற்போது சன் டிவியில் புதியதாக வரவிருக்கும் தொடர் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தத் தொடர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
வாழ்த்துகள் ஜிஷ்ணு - அபியாதிரா!