Siragadikka aasai : ரோகிணியின் சாயம் வெளுத்தது... மாஸ் காட்டிய முத்து! - இனி?
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோட் விறுவிறுப்பாக நகர்ந்தது. முத்துவும் மீனாவும் மண்டபத்தில் திருடனை பிடித்ததை பாராட்டி மணி மாலை அணிவிக்க வருகிறார். கையில் இரண்டு மாலையுடன் வரும் அவரை பார்த்து முத்து அதிர்ச்சியடைகிறார். முத்து, மீனாவை பார்த்து மணியும் அதிர்ச்சி அடைகிறார்.
பரசு மணியை முத்துவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவருக்கு மலேசியா மாமா விவகாரம் எல்லாம் தெரியாது என்பதால் முத்துவும் அமைதியாக பரசு சொன்ன விவரங்களை கேட்டுக் கொள்கிறார்.

முத்துவிடம் மாட்டிக் கொண்ட மணியின் ரியாக்ஷன் அருமை. மணி 20 வருடமாக சென்னையில் கறிக்கடை வைத்திருக்கிறார், எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை என பரசு சொன்னதை அமைதியாக முத்து கேட்டுக் கொள்கிறார். முத்து மணியின் கையில் இருந்த இரண்டு மாலைகளையும் வாங்கி அவருக்கே அணிவிக்கிறார்.
சிலரின் சாயம் வெளுக்கப் போகிறது
முத்துவும் மீனாவும் வீட்டிற்கு செல்கின்றனர். அண்ணாமலை, விஜயா, ரோகிணி, மனோஜ் ஆகியோரை அழைத்து இங்கு சிலரின் சாயம் வெளுக்கப் போகிறது என்று சொல்கிறார் முத்து. ரோகிணி முத்துவை விமர்சிக்கிறார். தேவையில்லாமல் ஏதாவது பேசுவதே முத்துவின் வேலை என மனோஜும் சொல்கிறார்.
முத்து மணியை வீட்டிற்குள் அழைக்கிறார். மணியை பார்த்ததும் அதிர்ச்சியில் ரோகிணி சமாளிக்க முயற்சி செய்கிறார். மனோஜோ தனக்கு பணம் கொடுப்பதற்காக மலேசியாவில் இருந்து வந்திருக்கிறார் என சொல்லி மகிழ்ச்சியாகிறார். விஜயா மணியை வரவேற்று உட்கார வைக்கிறார்.

ரோகிணி கொஞ்சம் கூட அசராமல் மலேசியா மாமா நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றுகிறார். மணி எதுவும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார். முத்து மணியை மண்டபத்தில் பார்த்த விவரத்தையும் அவரின் பின்னணியையும் சொல்ல வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். அதோடு நேற்றைய எபிசோட் முடிகிறது. முடிவில் வெளியான ப்ரோமோவில் விஜயா ரோகிணியை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்.
முத்து மணியின் கழுத்தில் மாலையை அணிவித்தது, அவரை வீட்டிற்க்கு வரவழைத்து பேசிய வசனங்கள் என அனைத்துமே மாஸ் காட்சிகளாக இருந்தன. குறிப்பாக மணியை விஜயா சம்மந்தி வாங்க என்று மரியாதை கொடுத்து சோஃபாவில் அமர வைத்த போது, முத்து கட்டிலில் அமர்ந்து நக்கலாக சிரித்த காட்சி ரசிக்க வைத்தது.
ரோகிணி செய்தது தவறு என்றாலும் விஜயா ரோகிணியை அறைவதெல்லாம் டூமச். மனோஜின் ரியாக்ஷன் என்ன? விஜயா இனி என்ன செய்வார்? ரோகிணியின் முதல் திருமண விஷயம் எப்போது தெரிய வரும் என்பதெல்லாம் அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும்.
அதனைத் தொடர்ந்து முத்துவின் சிறிய வயது பிளாஷ்பேக்கும் கதையில் கொண்டு வரப்படலாம். அப்படி நடந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்!