செய்திகள் :

Siragadikka Aasai : ரோகிணி சிக்கியது கனவா? நிஜமா? - பரபர புரொமோ

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான புரொமோவில் ரோகிணி பற்றிய உண்மைகளை மணி வீட்டில் சொல்லிவிடுகிறார்.

கடந்த எபிசோடில் முத்து-மீனா மண்டபத்தில் இருந்த மோசடி தம்பதியை கண்டுபிடித்துத் துரத்துகின்றனர். அப்போது மீனாவுக்கு கையில் அடிப்படுகிறது. இந்த விஷயத்தைப் பரசு மணியிடம் சொல்கிறார்.

மணிக்கு தற்போது வரை அண்ணாமலை குடும்பத்தினர் தான் பரசு சொன்ன நண்பரின் குடும்பம் எனத் தெரியாது. அதுதெரியாமல் முத்துவையும் மீனாவையும் சந்தித்து மரியாதை செலுத்தவேண்டும் என மாலையுடன் வருகிறார். அதோடு எபிசோட் முடிந்தது.

இந்த வாரத்திற்கான புரொமோவில் மணி முத்துவிற்கும் மீனாவிற்கும் அணிவிக்க கொண்டு வந்த மாலை அவரின் கழுத்தில் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் அண்ணாமலை, விஜயாவிடம் ரோகிணி பற்றிய உண்மைகளைச் சொல்கிறார்.

உண்மையை நீண்ட நாளுக்கு மறைக்கமுடியாது என மணி ரோகிணியிடன் சொல்கிறார். அந்தக்காட்சியை வைத்துப் பார்க்கும்போது ரோகிணி பணக்கார வீட்டு பெண் அல்ல, மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என மணி அண்ணாமலை முன்பு சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயா ரோகிணி பணக்கார வீட்டுப் பெண் அல்ல என்பதைத் தெரிந்ததால் கோபப்பட்டு அறைகிறார். ரோகிணியை வீட்டை விட்டுத் துரத்துகிறார்.

இந்த புரொமோவுக்கு ரசிகர்கள் பலர் ’’இது கனவாக இருக்கக்கூடாது” என கமென்ட் செய்துள்ளனர். மணி கையில் எடுத்து வந்த இரண்டு மாலைகளை அவரின் கழுத்திலேயே அணிந்துள்ளார். எனவே இது கனவாக இருக்க வாய்ப்பில்லை. முத்துவிற்கு உண்மைகள் தெரிந்திருக்கும். மணி இதற்கு மேல் மறைக்க வேண்டாம் என உண்மைகளைக் கூறியிருப்பார்.

ஆனால் ரோகிணி ஏற்கெனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் உண்மையும் இன்னும் வெளிவரவில்லை. ரோகிணி பணக்கார வீட்டுப் பெண் கிடையாது என்னும் உண்மையால் விஜயா அவரை வீட்டை விட்டுத் துரத்தினாலும், அண்ணாமலை ரோகிணியை வீட்டை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஹூசைனி என்கிற வீரனை கடுமையான நோய் தாக்கி வீழ்த்தியிருக்கு - கலங்கும் குடும்ப நண்பர் ஜெயந்தி

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி உடல்நலக் குறைவால் இன்று (25.03.2025) காலமாகினார். அவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் A.L.S தயாரிப்பு ந... மேலும் பார்க்க

``பாகிஸ்தான் போயிட்டு வந்தேன்; சினிமா கம்பேக் இல்லை" - சொர்ணமால்யா| இப்ப என்ன பண்றாங்க பகுதி 2

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணியின் சாயம் வெளுத்தது... மாஸ் காட்டிய முத்து! - இனி?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோட் விறுவிறுப்பாக நகர்ந்தது. முத்துவும் மீனாவும் மண்டபத்தில் திருடனை பிடித்ததை பாராட்டி மணி மாலை அணிவிக்க வருகிறார். கையில் இரண்டு மாலையுடன் வரும் அவரை பார்த்து முத... மேலும் பார்க்க

`அவனுக்கு இதெல்லாம் தேவைன்னு என் கூட இருந்தவங்களே..!' - `கனா காணும் காலங்கள்' சுரேந்தர் எமோஷனல்

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் `சைக்கோ' ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர்சுரேந்தர். `சைரன்' படத்திலும்இவர் நடித்திருந்தார். சமீபத்தில் ஏற்பட்ட பைக் விபத்தில் இவருடைய காலில் அடிபட்டு அதற... மேலும் பார்க்க

காதலியை கரம் பிடிக்கும் `சுந்தரி' தொடர் நடிகர்; குவியும் வாழ்த்துகள்!

சின்னத்திரை நடிகராக பரிச்சயமானவர் ஜிஷ்ணு மேனன். சமீபத்தில் `சுந்தரி' தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார். ஜிஷ்ணு கேரளாவைச் சேர்ந்தவர். அவருக்கும்செலிபரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அபியாதி... மேலும் பார்க்க

Serial Update: கர்ப்பமானதை அறிவித்த சின்னத்திரை ஜோடி; மீண்டும் வில்லியாகக் களம் இறங்கும் ஃபரீனா!

சன் டிவியில் தொகுப்பாளராகப் பரிச்சயமானவர் அஷ்வத். இவருக்கும்சின்னத்திரை நடிகை கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த தம்பதி பெற்றோர்கள் ஆக இருக்கும் செய்தியை அவர்களுடைய ரசிகர்களுக்கு ... மேலும் பார்க்க