பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
`அவனுக்கு இதெல்லாம் தேவைன்னு என் கூட இருந்தவங்களே..!' - `கனா காணும் காலங்கள்' சுரேந்தர் எமோஷனல்
`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் `சைக்கோ' ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் சுரேந்தர். `சைரன்' படத்திலும் இவர் நடித்திருந்தார். சமீபத்தில் ஏற்பட்ட பைக் விபத்தில் இவருடைய காலில் அடிபட்டு அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

" ஃப்ரெண்ட் ஒரு பையன் கூப்டான்னு அவனுக்குத் தெரிஞ்ச கல்யாணதுக்குப் போறதுக்காக பைக்ல அவன் கூட திருச்சி போயிருந்தேன். அங்க போயிட்டு திரும்பி வரும் போது தான் இந்த ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. அந்தப் பையனுக்கு ஒண்ணும் ஆகல. எனக்கு காலில் செம அடி. இப்ப ராட் வச்சிருக்காங்க. ஆறு மாசம் ரெஸ்ட் எடுக்கும்படி ஆகிடுச்சு.
இதுவரைக்கும் கால் நீட்டி மட்டும் தான் உட்கார முடிஞ்சது. இப்ப மடக்குற அளவுக்கு குணமாகியிருக்கு. இன்னும் ரெண்டு மாசத்துல எல்லாம் சரியாகிடும்!" என நம்பிக்கை ததும்ப பேசத் தொடங்கினார்.
`இன்னும் மென்டலி அதுல இருந்து வெளியில வரல'
" வீட்டுக்குள்ளயே முடங்கி கிடக்குறது ரொம்ப ஒரு மாதிரி இருக்கு. டிராவல், ஃப்ரெண்ட்ஸ்னு சுத்திட்டு இருந்த பையன் இப்ப நாலு சுவத்துக்குள்ள உட்காரணுங்கிறது கஷ்டமா இருக்கு. கனா காணும் காலங்கள், சைரன் படத்துல எல்லாம் சண்டைக்காட்சிகளில் நடிச்சிருப்பேன். இப்ப என் கால் அடியைப் பார்க்கிறப்ப நம்மளால ஓட முடியுமா, அது மாதிரி சண்டைக்காட்சியெல்லாம் பண்ண முடியுமான்னுலாம் நினைக்கத் தோணுது. இன்னும் நான் மென்டலி அதுல இருந்து வெளியில வரல.

ஆக்சிடென்ட் ஆனப்ப என் ஃப்ரெண்ட்ஸ் உதவி கேட்டு மெசேஜ் போட்டிருந்தாங்க. ட்ரீட்மென்ட்டிற்கு தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு பலர் உதவியிருந்தாங்க. அவங்க எல்லாருக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன். வீட்டுச் செலவுகளை எல்லாம் என் மாமா பார்த்துக்கிறாங்க. வீட்ல எனக்கு என்னோட பாட்டியும், தம்பியும் ஹெல்ப் பண்றாங்க.
பாத்ரூம் போறதுல இருந்து எனக்கான எல்லா தேவையையும் அவங்க தான் கவனிச்சிக்கிறாங்க. எனக்கு அம்மா, அப்பா இல்ல. அவங்களுடைய இடத்துல பாட்டியும் மாமாவும் தான் இருந்து என்னை கவனிச்சிக்கிறாங்க. இந்த வயசுல பாட்டியை கஷ்டப்படுத்துறோமே நாம அவங்களை பார்த்துக்கணும், இந்த வயசுல அவங்களை கஷ்டப்படுத்துறோமோன்னு வருத்தமா இருக்கு.
ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடி 3,4 புராஜக்ட் கையில இருந்தது. விபத்து நடந்ததால அதை பண்ண முடியாம போச்சு. இப்ப வீட்ல இருக்கும் போது விஜய் டிவியில் `பாக்கியலட்சுமி' தொடரில் இனியாவோட பாய் ஃப்ரெண்ட் ஆக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பையும் எடுத்துக்க முடியாம போச்சு. இப்ப அதுல கனா காணும் காலங்கள் சீசன் 3 பண்ணியிருந்த அஜித் தான் பண்றார். அவர் ரொம்ப நல்லாவே பண்ணிட்டிருக்கார்!" என்றவரிடம் கனா டீம் குறித்துக் கேட்டோம்.

"விபத்து நடந்தது தெரிஞ்சதும் ஏகன் அண்ணா, செல்வா, கார்த்தி எல்லாரும் முதல் நாளே வந்துட்டாங்க. ஏகன் அண்ணா பண ரீதியாகவும் உதவி பண்ணினார். அதே மாதிரி மறுநாள் தீபிகா அக்கா, ராஜா அண்ணா, திடியன் அண்ணா, டால்ஃபி அண்ணா வந்திருந்தாங்க.
தீபிகா அக்கா, ராஜா அண்ணாவும் பண ரீதியாகவும் சப்போர்ட் பண்ணினாங்க. கனா காணும் காலங்கள் டீம்ல இருந்து நிறைய பேர் ஹெல்ப் பண்ணியிருந்தாங்க. என் கூட நல்லா குளோஸ் ஆக இருந்த சிலரே எனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும், `அவனுக்கு இதெல்லாம் தேவை தான்'னு சொல்லி பேசியிருக்காங்க. அதெல்லாம் கஷ்டமா இருந்துச்சு!" என்றார்.
சுரேந்தர் இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்திருந்தார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!