Sujatha Karthikeyan: விருப்ப ஓய்வு பெறும் ஒடிஷாவின் 'பவர்ஃபுல் IAS' - யார் இவர்?
``சமூக வலைதளங்கள் துன்பம் அளிக்கும் கருவியாகிவிட்டது!'' -புத்தக வெளியீட்டில் நடிகை வசுந்தரா
‘பேராண்மை’, ‘போராளி’, ‘தலைக்கூத்தல்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை வசுந்தரா. தனது திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
சமீபத்தில், சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பை தாண்டி தற்போது வசுந்தரா எழுத்தாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார்.

நடிகை வசுந்தரா தனது நாவலான ‘தி அக்கியூஸ்ட்’ (The Accused) என்ற கிரைம் நாவலை வெளியிட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மர்மமான கொலை ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்த நாவல் மக்களை உற்சாகத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தக்கூடிய திருப்பங்களை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நாவலில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்னைகள், குறிப்பாக சமூக வலைதளங்களில் சந்திக்கும் தொல்லைகள், தவறான குற்றச்சாட்டுகள் போன்ற விஷயங்கள் ஆழமாக பேசப்பட்டுள்ளன.
புத்தக வெளியீட்டு விழாவில் நடிகை வசுந்தரா, ``பெண்கள் எல்லா துறைகளிலும் தைரியமாக செயல்பட வேண்டும். துணிச்சலுடனும் சுயமரியாதையுடனும் பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும் .

பெண்கள் எங்குச் சென்றாலும் தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும். சமூக வலைதளங்கள் இன்று வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவை சிலருக்கு துன்பம் அளிக்கும் கருவியாகவும் மாறிவிட்டது.
பெண்கள் எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தங்கள் சுயமரியாதையை பாதுகாத்து சிறப்பாக செயல்பட வேண்டும்." எனக் கூறினார்.