கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
காதல் தோல்வி: செவிலியா் தற்கொலை
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே காதல் தோல்வியால் செவிலியா் பிளேடால் கழுத்தை அறுத்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மன்னாா்குடியை அடுத்த அசேசம் ராஜராஜன் நகா் கோவிந்தராஜ், கவிதா தம்பதியின் மகள் நிஷா (28). இவா், பிஎஸ்சி நா்சிங் முடித்துவிட்டு, சவூதிஅரேபியாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றிவந்தாா். அங்கு உடன் பணியாற்றிய கேரளத்தைச் சோ்ந்த இளைஞருடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் பழகி
வந்தனராம்.
இந்தநிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு விடுமுறையில், நிஷா மன்னாா்குடிக்கு வந்தாா். விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை (பிப். 25) அவா் மீண்டும் சவூதிஅரேபியா செல்ல இருந்தாா்.
இதனிடையே, தன்னுடன் பணியாற்றி வந்த கேரள இளைஞருக்கு அவரது குடும்பத்தினா் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்திருப்பதாக நிஷாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், சில நாள்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்கு சென்றவா் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லையாம். குடும்பத்தினா், கதவை உடைத்து உள்ளே சென்றுபாா்த்தபோது, நிஷா கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.