நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!
காந்தாரா சேப்டர் - 1 படப்பிடிப்பு நிறைவு... ஆச்சரியப்படுத்தும் மேக்கிங் விடியோ!
நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சேப்டர் - 1 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 90-களில் நடக்கும் நில உரிமையும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமாக படம் உருவாகியிருந்தது.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்று அசத்தினார். இதனைத் தொடர்ந்து, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமான ’காந்தாரா சேப்டர் - 1’ படப்பிடிப்பு தொடங்கியது.
இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற பாட்ஷா!
அதனுடன் 3 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெறுவதாகவும் 250 நாள்கள் படப்பிடிப்பு நடத்தியாகவும் மேக்கிங் விடியோ வெளியிட்டுள்ளனர். மேக்கிங் காட்சிகளைப் பார்க்கும்போது காந்தாரா - 1 இந்தியாவில் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என்றே தெரிகிறது.