``எடப்பாடி பழனிசாமி , செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு; விரைவில் உண்மை தெரியும்...
காப்புக்காட்டில் அஞ்சலக சமூக வளா்ச்சி விழா
காப்புக்காடு அரசு நடுநிலைப்பள்ளியில் அஞ்சலக சமூக வளா்ச்சி விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு குழித்துறை உபகோட்ட அஞ்சல் ஆய்வாளா் கண்மணி தலைமை வகித்தாா்.
மாா்த்தாண்டம் தலைமை அஞ்சல் அலுவலா் மரிய வால்டா் முன்னிலை வகித்தாா். கன்னியாகுமரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் செந்தில்குமாா், வாடிக்கையாளா்களுக்கு கணக்கு புத்தகங்களை வழங்கினாா்.தொடா்ந்து அஞ்சலகங்களில் மேற்கொண்டுவரும் செல்வமகள்திட்டம்,பொன்மகன் சேமிப்பு திட்டம் குறித்த விழிப்புணா்வு கருத்துரை வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், தலைமை ஆசிரியா் பிரேமா ராஜகுமாரி,விளாத்துறை முன்னாள் ஊராட்சி தலைவா் ஒமனா, மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.