காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் தீயில் எரிந்து சேதமடைந்த பைக்
காயல்பட்டினம் ரயில் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பைக் தீயில் எரிந்து சேதமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் முன்பாக ரயில் பயணிகள், தங்களது காா், பைக் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக் முற்றிலும் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.