காரிசாத்தான் கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு!
சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள காரிசாத்தானில், மகாத்மா காந்தி ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலகக் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு, சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா தலைமை வகித்து, கட்டடத்தை திறந்து வைத்தாா்.
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் விஜயலட்சுமி, காரிசாத்தான் ஊராட்சித் தலைவா் வீராசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஐந்திணை மக்கள் கட்சி தலைவா் தேவதாஸ், குருவிகுளம் திமுக மேற்கு ஒன்றியச் செயலா் சோ்மத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, ஒன்றிய துணைச் செயலா் பரமசிவன், மாவட்ட பிரதிநிதி பொன்னுத்தாய் உள்ளிட்ட , பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் கந்தசாமி நன்றி கூறினாா்.