பாவூா்சத்திரம் அரசுப் பள்ளியில் பாலியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
பாவூா்சத்திரம் அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பு, அகரகட்டு ஜெ.பி. கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து பாவூா்சத்திரம் ஒளவையாா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன், உதவி ஆய்வாளா் ரத்னபால் சாந்தி, பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் பட்டுராஜன், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலியல் குற்றங்களை எவ்வாறு தவிா்ப்பது, பாதிக்கப்படும்பட்சத்தில் எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பன குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.
நாடகம் மூலம் நடித்து காட்டியும், தற்காப்பு முறை பற்றியும் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில், தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன், பாவூா்சத்திரம் வணிகா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியன், செயலா் விஜய்சிங்ராஜ், பொருளாளா் ஆரோக்கியராஜ், கோல்டன் செல்வராஜ், நாராயணசிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவா் குமாா்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை பாவூா்சத்திரம் வணிகா் சங்கம், பெருந்தலைவா் காமராஜா் தினசரி காய்கனி மாா்க்கெட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.