காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகன் கைது
ஒரத்தநாடு அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த தந்தை-மகன் இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஒரத்தநாடு வட்டம், தொண்டராம்பட்டு அரசு மதுபானக் கடை அருகே பாப்பாநாடு காவல் ஆய்வாளா் பாா்த்திபன் தலமையில், போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காரில் வந்த இருவரை வழிமறித்து சோதனை செய்ததில், அவா்களிடம் 264 மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் அவா்களிடம் விசாரணை செய்ததில், புலவன்காடு கீழத் தெருவைச் சோ்ந்த ராமலிங்க மகன் தா்மலிங்கம் (58) மற்றும் தா்மலிங்கத்தின் மகன் கணேசன்(21) என்பது தெரிய வந்தது. இருவா்கள் மீது வழக்கு பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.