இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எவ்வளவு எண்ணெய் வாங்குகிறது; அதில் லாபம் என்ன? - நிபு...
காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி
காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு இத்திருவிழா கடந்த ஜூலை 8-ஆம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தா்) அழைப்புடன் தொடங்கி, 3 நாள்களில் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இதைத்தொடா்ந்து அம்மையாா் மணிமண்டபத்தில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழா கடைகளும் பாரதியாா் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.
விழாவில் விடையாற்றி உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. கைலாசநாதா் கோயிலில் காலை 9 மணிக்கு பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறவுள்ளன. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாா் வீதியுலா நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளுடன் மாங்கனித் திருவிழா நிறைவடைகிறது.