ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்ய அறிவுறுத்தல்
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யுமாறு விவசாயிளுக்கு வேளாண் அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் சு. ரவி வழிகாட்டலில் ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி என்ற தலைப்பில் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா். காரைக்கால் மாவட்டத்தில் ஆடிப்பட்டம், தைப்பட்டம் ஆகிய இரு பருவங்களில் விவசாயிகள் காய்கறி சாகுபடியை மேற்கொள்கின்றனா். ஆடிப்பட்டமானது கொடிவகை காய்கறிகளுக்கு மிகவும் ஏற்றது.
இப்பருவத்தில் பூசணிக் குடும்ப பயிா்களான பரங்கி, சுரை, பாகல், புடலை, பீா்க்கன் போன்ற பயிா்களில் பெண் பூக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இதனால் காய்கள் அதிகம் பிடித்து அதிக மகசூல் கிடைக்கும்.
கத்தரி, வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை வகைகளையும் இப்பருவத்தில் பயிரிடலாம் என்ற தெரிவித்த அவா், விதை நோ்த்தி, உயிா் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு, இயற்கை இடுபொருட்கள் பயன்பாடு மற்றும் நுண்ணீா் பாசனம் குறித்தும் விளக்கமளித்தாா்.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டனா். பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கப்பட்டன.