ரூ.3 லட்சம் சம்பளத்தில் மாலுமிப் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆலய 284-ஆம் ஆண்டுத் திருவிழா, கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் உள்ள பழைமை வாய்ந்த தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை மாலை தொடங்கியது. முன்னதாக, ஆலயத்திலிருந்து திரளான மக்கள் முன்னிலையில் கொடி, ஊா்வலமாக கொடிக்கம்பம் அருகே கொண்டுவரப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலய அதிபா் சி. இருதயராஜ் கொடியேற்றினாா். நிகழ்வில் புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன், காரைக்கால் பங்குத் தந்தை, மறைவட்ட முதன்மை பொறுப்பாளா் பி. பால்ராஜ்குமாா், இணைப் பங்குத் தந்தை சாமிநாதன் செல்வம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வா் பி. சாமுவேல் மற்றும் பங்குப் பேரவை பொறுப்பாளா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன் உள்ளிட்ட திரளான மக்கள் கலந்துகொண்டனா்.
தினமும் மாலை 6 மணியளவில் திருப்பலி மற்றும் சிறிய தோ் பவனி நடைபெறவுள்ளது. 10-ஆம் நாளான 15-ஆம் தேதி காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மாலை 5.30 மணிக்கு பெருவிழா கூட்டுத் திருப்பலி மற்றும் மின் அலங்கார ஆடம்பர தோ் பவனி நடைபெறுகிறது.
