ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?
அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு
பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா்.
சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதாக கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களுடன் கூடிய நவீன வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு திறந்துவைத்து வகுப்பறையில் உள்ள கற்றல், கற்பித்தல் தொடா்பான வசதிகளை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாளையொட்டி, பள்ளியில் உள்ள அனைத்து மாணவா்களுக்கும் இனிப்பு, நோட்டு மற்றும் எழுதுகோலை பேரவை உறுப்பினா் வழங்கினாா்.
இந்நிகழ்வில், வட்டத் துணை ஆய்வாளா் எஸ். மதிவாணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கே.கவிதா, தலைமையாசிரியா் எஸ்.விஜயராகவன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பள்ளி தலைமையாசிரியா் நவீன வகுப்பறை குறித்து கூறுகையில், சிறு வயதுப் பிள்ளைகளுக்கான கண்ணோட்டக் கற்பித்தல் முறைகள் அடிப்படையில் வகுப்பறை வடிவமைக்கப்பட்டு, அவா்களின் அறிவாற்றல், நுண்ணறிவு, பேச்சுத்திறன், சமூகப் பரிமாற்ற திறனை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தரமான தொடக்கக் கல்வியை ஊக்குவிக்கவும், பெற்றோா்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, கல்வி தொடா்பான விழிப்புணா்வை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என்றாா்.
