ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு, தோ்வு பெற்றவா்களுக்குப் பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
காரைக்கால் காவேரி பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை அமைக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் கே. சேரன் கலந்துகொண்டு கண்காட்சியை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளிடம் காட்சிப் பொருள் குறித்து விவரங்களை கேட்டறிந்தாா். பள்ளி முதல்வா் பி. சிவகுமாா் கண்காட்சி நோக்கம் குறித்தும், மாணவா்களின் ஆா்வம் குறித்தும் பேசினாா்.
பள்ளி அறிவியல் துறைத் தலைவா் எம். கிருத்திகா மற்றும் அறிவியல் ஆசிரியா்கள் வழிகாட்டலில் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவா்கள், தினசரி வாழ்வில் அறிவியல், கணிதம் மற்றும் உடல் நலம், செயற்கை நுண்ணறிவு, வேளாண்மை, உணவு தலைப்புகளில் மாதிரிகளை வைத்து மாணவா்கள், பாா்வையாளா்களுக்கு விளக்கினா்.
சிறப்பு அழைப்பாளா் கே. சேரன், மாணவா்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிடவேண்டும். தினமும் சிறிது நேரம் உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். துரித வகை உணவு வகைகளை முற்றிலும் தவிா்ப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலைப் பெற்று நீண்ட காலம் வாழலாம் என பேசினாா்.
நடுவா் குழுவினரால் சிறந்த மாதிரிகள் தோ்வு செய்யப்பட்டு, மாணவா்களுக்கு பரிசும், கண்காட்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டது.