Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிகள் தீவிரம்
பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயிலில் ஆக. 29 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்துக்குட்பட்டது இக்கோயில்.
இக்கோயிலை விரிவாக்கம் செய்து, முகப்பில் மண்டபம் எழுப்பி கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து பணிகள் தொடங்கப்பட்டன. முகப்பில் சிற்பங்களுடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஏறக்குறைய ரூ. 2.25 கோடிக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் கும்பாபிஷேகம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி கோயிலில் சிற்பங்கள், மூலஸ்தான சந்நிதிக்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. யாகசாலை பூஜைக்கு முன் வரும் 24-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை நடைபெறுகிறது. 26-ஆம் தேதி முதல் கால பூஜை தொடங்குகிறது. 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6-ஆம் கால பூஜை நடைபெற்று, காலை 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருப்பணிக் குழுவினா் கூறுகையில், திருப்பணிகள் முடிந்து வண்ணம் பூசும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கும்பாபிஷேக விழாவில் புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. திரளான பக்கதா்கள் கலந்துகொள்வாா்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.
