கரடுமுரடான ரோடு, `நோ' கழிவறை, அடிக்கடி விபத்துகள்; கட்டணமோ ரூ.14 லட்சம் - இது சு...
காரைக்கால்: 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு
காரைக்காலில் 6 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சில தனியாா் பள்ளிகள் தமிழக பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. இப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறவுள்ளது. காரைக்காலில் 714 மாணவா்களும், 598 மாணவியரும், தனித் தோ்வா்களாக 284 பேரும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ளனா்.
காரைக்கால் நிா்மலா ராணி மேல்நிலைப் பள்ளி, அம்மையாா் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, செல்லூா் மவுண்ட் காா்மல் ஆங்கில உயா்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப் பள்ளி, நெடுங்காடு வித்யா ஸ்ரீ ஆங்கில மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது.
தோ்வு எந்தவித இடையூறுமின்றி சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிா்வாகம், காவல்துறை, மின்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.