Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
காரைக்குடியில் புதிய நூலகத்தை பாா்வையிட்ட சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய நூலகத்தை சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்தின் சொந்த நிதியில் திருமதி லட்சுமி வளா் தமிழ் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தை சட்டப் பேரவை பொதுக் கணக்குழு தலைவா் கு. செல்வப் பெருந்தகை, குழு உறுப்பினா்களான போலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூா்த்தி, காஞ்சிபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சி.வி.எம்.பி. எழிலரசன், நாகப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷாநவாஸ், காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தா் க. ரவி, பதிவாளா் அ. செந்தில்ராஜன், பேராசிரியா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.