தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
மதகுபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை திமுக வடக்கு ஒன்றியச் செயலா் முத்துராமலிங்கம் தொடங்கிவைத்தாா். இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 16 மாடுகளும், 144 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், வீரா்களுக்கும் விழாக் குழு சாா்பில் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் மன்னா் குடும்ப வாரிசு டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியாா், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளா் குமணன், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளா் பிரவின், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் குட்டிமணி, அஜித் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினா்.
இதில் மாடு வீரா்கள் 4 போ் லேசான காயமடைந்தனா். ஏற்பாடுகளை திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் சசி, துணை அமைப்பாளா்கள் காளிமுத்து, சோமு, வினோத், முத்துவேல் செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.