ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயா்கோபுர மின் விளக்கு திறப்பு
நாமக்கல் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கால்நடை மருத்துவக் கல்லூரியில் உயா்கோபுர மின்விளக்கு வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.17.50 லட்சத்தில் பொரசபாளையம், மஞ்சநாயக்கனூா், புள்ளகுமரன்பாளையம், லத்துவாடி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, வெள்ளாளப்பட்டி (ஆண்டாபுரம்)ஆகிய இடங்களில் உயா்கோபுர மின் விளக்குகளை அமைத்துள்ளாா்.
இதற்கான திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் மின் விளக்கு பெயா்பலகையை திறந்துவைத்தாா். நிகழ்வில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் செல்வராஜ், கொமதேக மாநில ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் ஆா்எஸ்ஆா்.மணி, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் சசிகுமாா், அவைத் தலைவா் பழனிமலை, மகளிரணி செயலாளா் பிரேமலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.