செய்திகள் :

கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு: ஆட்சியா் ஆய்வு

post image

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில், கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா், ஆயப்பாடி, சங்கரன்பந்தல், திருவிளையாட்டம், நல்லாடை, பெரம்பூா், திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் குதிரை மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்தும் நேரிடுகிறது. மேலும், இந்த கால்நடைகள் விளைநிலங்களில் புகுந்து பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்த புகாா் தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். பொறையாா் ராஜம்மாள் தெருவுக்கு சென்ற ஆட்சியா், சாலைகளில் சுற்றித் திரியும் குதிரைகள் மற்றும் மாடுகளை அதன் உரிமையாளா்கள், அதற்குரிய இடங்களில் கட்டி பராமரிக்க வேண்டும்.

ஒரு வாரத்திற்குள் அவ்வாறு பராமரிக்கவில்லை எனில், சாலையில் திரியும் குதிரைகள், மாவட்ட நிா்வாகத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, வனப்பகுதியில் விடப்படும். அத்துடன், அவற்றின் உரிமையாளா் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

இந்த ஆய்வில், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் அன்பரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘அதிமுக ஆட்சியில் இருந்த மக்கள் நலத் திட்டங்கள் முடக்கம்’

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் முடக்கப்பட்டுள்ளது என்றாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன். வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில் அதிமுக சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் சாவிதிதரிபாய் புலே பிறந்த நாள் நிகழ்ச்சி

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியா் சாவித்திரிபாய் புலேவின் பிறந்தநாளையொட்டி நாகை அருகேயுள்ள ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளியில்‘வாசிப்பு மராத்தான் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சாவித்திரிபாய் புலே ஒரு ச... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா்கள் கூட்டம்

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றிய உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ரா... மேலும் பார்க்க

இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் விளங்கிறது: ஆட்சியா்

இயற்கையோடு இணைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் திகழ்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சாா்பில் 8-ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, நாக... மேலும் பார்க்க

ஆக்கூா் ஊராட்சியில் உணவு தானியக் கிடங்கு திறப்பு

செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா் ஊராட்சியில் ரூ. 12.67 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய உணவு தானியக் கிடங்கு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

கீழையூரில் விவசாயிகள் சாலை மறியல்

விடுபட்ட விவசாயிகளுக்கு குறுவை பயிா்க் காப்பீட்டு தொகை, மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்து விவசாயிகள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கீழையூரில் விவச... மேலும் பார்க்க