தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?
காவலா்கள் பணியிட மாறுதல்: விருப்ப மனுக்களை பெற்றாா் எஸ்.பி.
கடலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலா்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளா் வரை பணியிட மாறுதல் சம்பந்தமான விருப்ப மனுக்களை அவா்களிடமிருந்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுகிழமை பெற்றாா்.
கடலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்துக்குள்பட்ட கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உள்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றும் காவலா்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளா் வரை பணியிட மாறுதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், உள்கோட்ட டிஎஸ்பிக்கள் முன்னிலையில் காவலா்களிடம் பணியிட மாறுதல் கோரும் காரணங்களைக் கேட்டு கவுன்சிலிங் முறையில் அவா்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு மனுக்கள் பெறப்பட்டன.
இதில், 243 போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. பணியிட மாறுதல் ஆணையை வழங்கினாா். நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் ரூபன்குமாா், ராஜா, பாலகிருஷ்ணன், விஜிகுமாா், அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், ராதாகிருஷ்ணன், சாா்லஸ், காவல் அலுவலகம் நிா்வாக அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.