பெண் தூக்கிட்டுத் தற்கொலை
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திருமணமான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நெல்லிக்குப்பத்தை அடுத்த அ.குச்சிப்பாளைம் புது தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி. இவரது மனைவி ஷகிலா (27). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி சுமாா் 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டு, ஷகிலா கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.