ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்...
ஜூலை 18ல் பிகார் செல்கிறார் பிரதமர் மோடி!
பிகாரில் உள்ள மோதிஹரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பாஜக தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிகாரில் படையெடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக திலீப் குமார் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜூலை 18ல் பிரதமர் மோடி பிகாரின் மோதிஹரிக்கு வருகை தருவார். இது பிரதமரின் 53வது மாநில வருகையாகும். பிரதமர் மோடியின் மாநில வருகை விக்சித் பிகார் மாநிலத்திற்கானது.
வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், பிரேசிலில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மனிதக்குலத்திற்குக் கடுமையான அச்சுறுத்தல் என்று அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். உலகளாவிய தெற்கில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடியின் பிகார் வருகையின்போது சமஸ்திபூரில் ரூ. 17 கோடி மதிப்புள்ள ரயில் திட்டங்களைத் தொடங்கி வைப்பார். மேலும் கற்பூரி கிராம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டுவார் என்று அவர் தெரிவித்தார்.