காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் 5 காவல் உதவி ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தேனி மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேஸ்வரி அல்லிநகரம் காவல் நிலையத்துக்கும், ராயப்பன்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் அருண்பாண்டி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். கண்டமனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மலைச்சாமி தேனி காவல் நிலையத்துக்கும், பழனிசெட்டிபட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமாறன் தேவாரம் காவல் நிலையத்துக்கும், தேவாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் தெய்வகண்ணன் பெரியகுளம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் புதன்கிழமை பிறப்பித்தாா்.