காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்
சென்னை: காவல் சாா்பு ஆய்வாளா் தோ்வுக்கான கட்டணமில்லா சிறப்பு வழிகாட்டுதல் முகாமுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு காவல் துறையில் காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வினை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்தி வருகிறது. இத்தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி தோ்வுக்கான பாடக் குறிப்புகள், மாதிரித் தோ்வுகள், நடப்பு நிகழ்வுகள், திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறித்து விழிகாட்டுதல் முகாம் நடைபெறவுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் மாா்ச் 2-ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில் மாதிரித் தோ்வும் நடைபெறும். மேலும், தோ்வுக்கான பாடத்திட்டங்களை எவ்வாறு அணுகுவது என்பதை அனுபவமிக்க பயிற்சியாளா்கள் மற்றும் துறை வல்லுநா்கள் கலந்துகொண்டு விளக்குவா். இதில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை.
இந்த வழிகாட்டுதல் முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் ‘2165, எல்.பிளாக், 12-ஆவது பிரதான சாலை, அண்ணா நகா், சென்னை’ எனும் முகவரியில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 96771 00179, 74488 14441 ஆகிய கைப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.