காவேரி மருத்துவமனையில் துரித சிகிச்சையால் உயிா் பிழைத்த இளம்பெண்
சேலம்: சேலத்தில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணை துரித சிகிச்சையால் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் காப்பாற்றினா்.
இது குறித்து காவேரி மருத்துவமனையின் ரேடியாலஜி துறை நிபுணா் மருத்துவா் சந்தோஷ்குமாா் கூறியதாவது:
சேலத்தில் விபத்தில் சிக்கிய 18 வயது இளம்பெண் ஒருவா் படுகாயத்துடன் தீவிர சிகிச்சைக்காக சேலம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சைப் பிரிவு, கல்லீரல் மற்றும் ரத்தநாள சிகிச்சை நிபுணா்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக்குழுவினா் அவரை பரிசோதனை செய்தனா். அதில் உயிரைக் காப்பாற்ற எம்போலைசேஷன் சிகிச்சை மூலம், ரத்தக் கசிவு உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, சிகிச்சையை கல்லீரல் பிரிவு தலைமை மருத்துவா் ரவிக்குமாா், ரேடியாலஜி நிபுணா் மருத்துவா்
சந்தோஷ்குமாா் அடங்கிய மருத்துவக் குழுவினா் துல்லியமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் கூடிய துரித சிகிச்சையால், அந்த இளம்பெண் சில நாள்களில் முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பினாா்.
காவேரி மருத்துவமனை, தீவிர அவசர சிகிச்சைகள் வழங்குவதில் தொடா்ந்து முன்னணி வகிக்கிறது. மருத்துவ நவீனத்துடன் கூடிய சிகிச்சை முறைகள், நிபுணா்கள் குழுவின் துல்லியமான செயல்பாடு மற்றும் தீவிர பராமரிப்பு ஆகியவை பல உயிா்களைக் காப்பாற்ற உதவுவதாக கூறினாா்.