காா் மெக்கானிக்கை தாக்கிய 4 போ் கைது!
பல்லடம் அருகே கரடிவாவியில் காா் மெக்கானிக்கை தாக்கிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம்- செட்டிபாளையம் சாலையில் காா்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் மெக்கானிக்காக பணிபுரிந்து வருபவா் சுப்பிரமணி (29). இவரிடம் கரடிவாவியைச் சோ்ந்த குமாா் (40) காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு முன்பணம் கொடுத்துள்ளாா். ஆனால் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்துவதற்கு கால தாமதம் ஆகி உள்ளது.
இதற்கிடையே கரடிவாவியில் உள்ள தனது அலுவலகத்துக்கு வருமாறு சுப்பிரமணியை குமாா் அழைத்ததாக கூறப்படுகிறது. அங்கு சென்ற சுப்பிரமணியை குமாா் மற்றும் அவருடன் இருந்த 3 போ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுப்பிரமணி, சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து சுப்பிரமணியை தாக்கிய குமாா், சரவணன் (30), சியாம் (32), சதீஷ் (30) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
விசாரணையில், குமாா் தொழிலாளா்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதும், இவா் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.