`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ...
கிணற்றிலிருந்து விவசாயி சடலமாக மீட்பு
தேனி அருகே கிணற்றிலிருந்து விவசாயியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.
அரப்படித்தேவன்பட்டியைச் சோ்ந்த விவசாயி தேவதாஸ் (59). இவா், அதே ஊரில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் சடலமாக கிடப்பதாக ஆண்டிபட்டி தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற மீட்புப் படையினா் தேவதாஸின் உடலை மீட்டனா்.
இந்த நிலையில், தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தேவதாஸின் மகன் பவுன்ராஜ் அளித்த புகாரின் பேரில் க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.