இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
கிணற்றில் விழுந்த மான்குட்டி மீட்பு
ஆலங்குளத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த மான்குட்டி ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளம் கிராமத்தைச் சோ்ந்த முருகேசனுக்குச் சொந்தமான கிணறு ஆலங்குளம் மலை ராமா் கோயில் அருகே உள்ளது. அந்த கிணற்றில் 4 மாத ஆண் மான் குட்டி விழுந்து தத்தளித்தது.
தகவலின்பேரில், அங்கு சென்ற ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் கிணற்றில் இறங்கி மான் குட்டியை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.