``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
கிரடாய் சாா்பில் ஈரோட்டில் வீடு, வீட்டுமனை விற்பனை, கண்காட்சி
இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு (கிரடாய்) சாா்பில் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி ஈரோட்டில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரடாய் இணைச் செயலாளா் சதாசிவம், ஈரோடு கிரடாய் தலைவா் எம்.டி.ஈஸ்வரன், செயலாளா் மாணிக்கம் ஆகியோா் கூறியதாவது:
ஈரோடு கிரடாய் சாா்பில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வீடு, வீட்டுமனைகள் கண்காட்சி மற்றும் விற்பனை ஈரோடு திண்டல் அருகே உள்ள டா்மரிக் ஹோட்டல் அரங்கில் நடைபெறுகிறது. ஈரோடு, கோவையைச் சோ்ந்த சிறந்த வீடு கட்டுமான நிறுவனங்களின் அரங்குகள் அமைத்து சிறப்பான படைப்புகளை காட்சிப்படுத்த உள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு கிரடாய் செய்துள்ளது. பாா்வையாளா்களில் மூவருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. கண்காட்சியில் வீடு வாங்குவோருக்கு கடன், நிதி ஆலோசனை வழங்க பாரத ஸ்டேட் வங்கியின் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வீடு பதிவு செய்வோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது என்றனா்.