``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா
பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் காளியப்பன் தொடங்கிவைத்தாா். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், எஸ்.எம்.சி. உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பள்ளி மாணவா்களுக்கு ஒன்று, இரண்டு வகுப்புகளுக்கு தனியாகவும், 3 முதல் 5 வகுப்புகளுக்கு தனியாகவும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு தனியாகவும், தனிப் போட்டி மற்றும் குழுப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா்.