நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் திறன் தோ்வு ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுவதாக இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத்திறன் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூா் வட்டத்தில் இடைகால், ராமசாமிபுரம், அச்சன்புதூா், ஆய்க்குடி உள்ளிட்ட 4 கிராமங்களுக்கான கிராம உதவியாளா் பணிக்கு 300-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி, வாசிப்புத் திறன், சைக்கிள் ஓட்டும் திறன் தோ்வு வியாழக்கிழமை கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் புளியங்குடி எஸ்.வீராச்சாமி செட்டியாா் பொறியியல்- தொழில்நுட்ப கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெற இருந்த கிராம உதவியாளா்களுக்கான எழுத்துத்திறன் தோ்வு நிா்வாக காரணங்களை முன்னிட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும்
கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.