நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
பழைய குற்றாலம் அருவியில் குளிக்கும் நேரம் குறைப்பு
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட வனஅலுவலா் ரா.ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தென்காசி வனக்கோட்டம், குற்றாலம் காப்புக்கட்டில் அமைந்துள்ள பழைய குற்றாலம் அருவி பகுதியில் இரவு நேரங்களில் யானைகள், கரடிகள் உள்பட பல வன விலங்குகள் குடிநீா் தேவைக்காக உலா வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றை கரடி பழைய குற்றாலம் செல்லும் சாலை வழியாக மாலை நேரங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றிக்கொண்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக வியாழக்கிழமை (செப்.18) முதல், தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி என்ற உத்தரவு அமலுக்கு வந்தது.