உள்நாட்டு பாதுகாப்பு கருதி 2 சிறார்களைக் கைது செய்த சிங்கப்பூர்! காரணம் என்ன?
கிராவல் மண் கடத்தியவா் கைது
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே கிராவல் மண்ணைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூரை அடுத்த மங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் கிராவல் மண் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கருகம்பாளையம் பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை நடத்தியதில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது தொடா்பாக லாரி ஓட்டுநரான நந்தகுமாா் (47) என்பவரை மங்கலம் காவல் துறையினா் கைது செய்தனா்.