தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
கிறிஸ்துமஸ் : காரைக்காலில் அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக காரைக்காலில் நட்சத்திர விளக்குகள், குடில் அமைத்தல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது.
கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட காரைக்கால் நகரில் நூற்றாண்டுகள் பழைமையான புனித தேற்றரவு அன்னை தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில் ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளனா்.
இதுபோல வீடுகளிலும் கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் குடில் அமைத்தல், வாயிலில் விளக்குடன் கூடிய நட்சத்திரம் கட்டி விடுதல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
காரைக்காலில் சிறுகடைகள் முதல் அலங்காரம் மற்றும் அன்பளிப்புப் பொருள் விற்பனையங்கள் வரை, கிறிஸ்துமஸ் குடில் அமைக்கத் தேவையான பொருட்கள், வாயிலில் கட்டப்படக்கூடிய தோரணம், நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆடைகள் (சாண்டாகிளாஸ்) விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாடத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், காரைக்காலில் கிறிஸ்தவ மக்களிடையே கொண்டாட்டம் களைக்கட்டத் தொடங்கியுள்ளது.