`காங்கிரஸ் ஆதரித்தால் பினராயி விஜயனுக்கு எதிராக போட்டி'- எம்எல்ஏ பதவியை ராஜினாமா...
கிறிஸ்துமஸ்: தேவாலாயங்களில் சிறப்பு பிராா்த்தனை
திருப்பூரில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டியை ஒட்டி ஏராளமான கிறிஸ்தவா்கள் புதன்கிழமை சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, திருப்பூா் மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதல் புதன்கிழமை காலை 9 மணி வரையில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
திருப்பூா் குமரன் சாலையில் உள்ள பழைமை வாய்ந்த கேத்தரின் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஆயிரக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.
அதேபோல, குமாா் நகா் சி.எஸ்.ஐ.ஆலயம், கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள புனித சூசையப்பா் ஆலயம், நீதிமன்ற வீதியில் உள்ள டி.இ.எல்.சி.ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாயலங்களிலும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள் புத்தாடைகள் அணிந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை ஒருவருக்கு ஒருவா் பரிமாறிக்கொண்டனா்.
முன்னதாக, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மாநகரில் உள்ள தேவாலயங்களில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
தாராபுரத்தில்....
தாராபுரத்தில் உள்ள புனித ஞானபிரகாசா் ஆலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதையொட்டி கிறிஸ்தவா்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனா்.