கிள்ளியூரில் ஆா்ப்பாட்டம்
கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் செங்கொடி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பால்ராஜ் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கியில் அதிக சப்தம் எழுப்புவோா் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.