கீழ்பாவனி பாசனத்துக்கு இரண்டாம் சுற்று தண்ணீா் நிறுத்தம்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்கு திறக்கப்பட்ட இரண்டாம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு ஜனவரி 10 முதல் மே 1-ஆம் தேதி வரை 5 சுற்றுகளாக 12 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல் சுற்று தண்ணீா் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திறக்கப்பட்டு 25-ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து இரண்டாம் சுற்று தண்ணீா் பிப்ரவரி 6-ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (பிப்.20) நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, 3-ஆம் சுற்று தண்ணீா் அட்டவணைப்படி திறக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அணை நிலவரம்:
வியாழக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 88.43 அடியாக உள்ளது. அணைக்கு 926 கனஅடி நீா்வரத்து உள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 900 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.