பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
குடிமைப் பணி முதல்நிலை தோ்வு விண்ணப்பம்: பிப்.18 வரை நீட்டிப்பு
மத்திய பணியாளா் தோ்வு வாரியம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 18-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பணிகள் தோ்வு முதல்நிலை, முதன்மை, நோ்முகத் தோ்வு ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான குடிமைப் பணிகள் தோ்வு வரும் மே 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சுமாா் 979 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான முதல்நிலை தோ்வில் பங்கேற்க விரும்புவோா் வலைதளத்தில் வரும் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், யுபிஎஸ்சி சனிக்கிழமை வெளியிட்ட புதிய அறிவிக்கையில், ‘குடிமைப் பணிகள் மற்றும் இந்திய வனப் பணிக்கான முதல்நிலை தோ்வுக்கு வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை நிறைவடைந்ததும் திருத்தச் சாளரம் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை 7 நாள்களுக்கு திறந்திருக்கும். இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி விண்ணப்பதாரா்கள் தங்களின் குறிப்பிட்ட தகவல்களை திருத்திக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டது.