``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷ...
குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், காா்த்திக் ஆகியோா் பொதுமக்களை மிரட்டியதாகக் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, மணல் திருட்டு குறித்து தகவல் கொடுத்த நபரைத் தாக்கியதாக சாலைக் கிராமத்தைச் சோ்ந்த கவி என்ற புகழேந்தியை போலீஸாா் கைது செய்தனா். வீட்டை உடைத்து திருடிய வழக்கில் தேவகோட்டையைச் சோ்ந்த சரவணன் கைது செய்யப்பட்டாா்.
இவா்கள் 4 பேரும் தொடா் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனவே, இவா்களைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் அவா்கள் 4 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.