குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்த கலியுகபெருமாள் மகன் காா்த்திக் (32). இவா் கஞ்சா கடத்தல் வழக்கில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால்
அண்மையில் கைது செய்யப்பட்டாா். இவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரை செய்தனாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், காா்த்திக்கை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.